திருச்சியில் தீக்கதிர் சந்தா, கியூபா ஆதரவு நிதி வழங்கல்
திருச்சிராப்பள்ளி, ஆக.16 - 79 ஆவது ஆண்டு சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் தீக்கதிர் நாளி தழ் சந்தா, கியூபா ஒருமைப்பாட்டு நிதி யளிப்பு பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் வெள்ளியன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தானம் தலைமை வகித் தார். மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றி செல்வம் ஆகியோர் பேசினர். தீக்கதிர் 235 சந்தாவிற்கான தொகை ரூ.3 லட்சத்து 81 ஆயிரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தானம், கியூபா பாதுகாப்பு நிதி ரூ.24 ஆயிரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகே யன் ஆகியோர் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். முன்னதாக தேசியக் கொடியை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கட்சிக்கொடியை மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் ஏற்றினர்.