tamilnadu

img

வனச்சரக அலுவலகத்தில் பழங்குடியினத்தவர் மரணம்

வனச்சரக அலுவலகத்தில் பழங்குடியினத்தவர் மரணம்

வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உடுமலை, ஆக.2- உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்ப வம் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். தமிழக - கேரள எல்லையிலுள்ள சோதனைச்சாவடியில் புதனன்று வாகன சோதனையின் போது, உடு மலை, மேல் குருமலை செட்டில் மெண்ட் பகுதியைச் சேர்ந்த மாரி முத்துவிடம் “புலியின் பல்” போன்ற  பொருள் இருந்ததாகக் கூறி உடு மலைப்பேட்டை வனச்சரக அலுவல கத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.  இதையடுத்து வியாழனன்று காலை, வனச்சரக அலுவலகத்தின் ஓய்வறையில் உள்ள கழிவறையில் மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வனத்துறை யினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை மற்றும் கோட்டாட்சியர் விசாரணைக்குப் பின், மாரிமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, வெள்ளி யன்று நீதிபதி நித்யகலா முன்னிலை யில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. இதனிடையே, மாரிமுத்துவை வனத்துறையினர் கொலை செய்து விட்டதாகக்கூறி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ உள்ளிட்டவை களை வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்டி சட்டப்படி பதிவு செய்து வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கி, நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு உறுதியான நட வடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், உடுமலை வனச் சரக அலுவலகத்தில் பணியாற்றும் வனவர் நிமல் மற்றும் வனக்காவலர் செந்தில்குமார் ஆகிய இரண்டு அதி காரிகள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். மேலும், வனச்சரக அலுவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள தாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.