4-ஆவது நாளாகப் போராடும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசு தலையிட்டு சுமூகத்தீர்வு காண வேண்டும்!
சென்னை, ஆக. 21 - அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் நான்கா வது நாளாக, காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கங்களோடு பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: முழுமையாக தீர்க்கப்படாத தொழிலாளர் பிரச்சனைகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தமிழகத்தில் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனமாகும். சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்ச னைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பலன்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவ தில்லை. அதேபோல், விலைவாசி உயர்வை ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது; மருத்துவக் காப்பீடும் இல்லை. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு பணப்பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இக்கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மேற்கண்ட சூழ்நிலையில், பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 25 மாத ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 01.04.2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழி லாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில் கடந்த 18.08.2025 முதல் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண தமிழக அரசு முன்வராமல், சென்னை நகரத்தில் காத்திருக்கும் போராட்டத்திற்கு காவல்துறை மூலம் அனுமதி மறுத்து விட்டது. இந்த அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல. தற்போது பணிமனை முன்பு போராட்டம் நடை பெறுகிறது. மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிற்சங்கங்களோடு பேசி சுமூகத்தீர்வுகாண வேண்டும் கடந்த 18.08.2025 அன்று 10 மாதத்திற்கான ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்கது. மீதியுள்ள 15 மாதங் களுக்கும் ஓய்வுக்கால பலன், நிலுவைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது சம்பந்தமாக தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு கண்டு காத்தி ருக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டு உள்ளது.