tamilnadu

img

இரவிலும் தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

இரவிலும் தொடர்ந்த போக்குவரத்து  தொழிலாளர்கள் போராட்டம்

கும்பகோணம்,  ஆக. 19-  அரசு போக்குவரத்து துறையில் 24 மாதமாக பணி ஓய்வுபெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழி லாளர்களுக்கு 2 வருட ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் 21 மையங்களில் போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு, கும்பகோணம் மண்டல தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் மணி மாறன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தை விளக்கி, மண்டலத் தலை வர் காரல் மார்க்ஸ், சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.கண்ணன், மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் திரு நாவுக்கரசு, தாமோதரன் ஆகியோர் உரையாற்றினர்.  தொழிலாளர்கள், கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமை யகம் முன்பே, இரவு முழுவதும் அதே இடத்தில் உறங்கி தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.