50 நாட்களை கடந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் அக்.9 கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை
சென்னை, அக்.6 - 50 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி அக்.9 அன்று கோட்டை முற்றுகை நடைபெற உள்ளது என சிஐடியு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், மாநில பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயி னார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திமுக தேர்தல் வாக்கு றுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். பணி புரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து சிஐடியு சார்பில் கடந்த ஆக.18 ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடை பெறும் இந்த போராட்டத்தில் தினமும் சுமார் 2000 பேர் அளவிற்கு ஓய்வுபெற்ற மற்றும் பணிபுரியும் தொழி லாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் 6.10.2025 அன்றுடன், 50 ஆம் நாள் நிறைவு பெற்றுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் சேவை யும் பாதிக்கப்படாமல், கடந்த 50 நாட்களாக நடை பெறும் தொடர் போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த செப். 1 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அழைத்து பேசினார். சங்கம் முன்வைத்த கோரிக் கைகளை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். நிதித் துறையுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறிய அமைச்சர் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. நடைபெறும் போராட்டம் புதிய கோரிக்கை களை முன்வைத்து நடைபெறவில்லை. தொழிலாளர் களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழக நிர்வா கங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டு களாக நடைபெறும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. சிஐடியு முன்வைத்துள்ள கோரிக்கைகளில், அரசு நடவடிக்கை எடுத்து உரிய தீர்வுகாணும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும். கோரிக்கை களுக்கு அரசு தீர்வு காண வலியுறுத்தி, சென்னை யில் 9.10.2025 (வியாழன்) அன்று கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். தொழிலா ளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அனைத் துப் பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டுமென சம்மேளனத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.