முதலமைச்சர் தலைமையில் விரைவில் போக்குவரத்து ஆணைய கூட்டம்
சென்னை, ஜூலை 14 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முதலமைச்சர் தலைமை யில் ஆணைய கூட்டம் நடைபெறும். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் கடந்த 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தனியான நிர்வாக அமைப்புடன் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. சென்னை பெருநகரின் தற்போதைய எல்லை மற்றும் விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிக்கும் சேர்த்து போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டங்களை உருவாக்கி யுள்ளது. இணைப்பு சாலை, டபுள் டெக்கர் பேருந்து வசதி கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து அம்சங்க ளும் ஆராயப்பட்டுள்ளன. 25 ஆண்டுகளுக்கான போக்கு வரத்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெரு நகர போக்குவரத்து ஆணைய (கும்டா) சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.