tamilnadu

img

ரயிலில் மாடு சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

ரயிலில் மாடு சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

 சென்னை, ஆக. 31- திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ரயில் நிலை யத்தில் புறநகர் ரெயிலில் மாடு சிக்கியதால் சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்க த்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி  புறநகர் மின்சார ரயில் மாலை 7 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதனால்  கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில்கள் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைப்பு  திருவண்ணாமலை, ஆக.31- திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் செப்,2 அன்று கோட்ட அளவில் நடை பெற இருந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு,  வருகின்ற செப். 9  அன்று நடைபெறும் என்று  மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.