tamilnadu

தீக்கதிர் உலக செய்திகள்

ஜெர்மனியுடன் வர்த்தக உறவு: அமெரிக்காவை முந்திய சீனா 

ஜெர்மனியின் முன்னணி வர்த்தகக் கூட்டாளியான அமெரிக்காவை 2025 இன் முதல் எட்டு மாதங்களில் சீனா முந்தியுள்ளது. ஜெர்மன் அரசு தரவுகள் மூலம் இது உறுதிசெய்யப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிகளானது அச்சந்தையை சீனா பிடிக்க வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது என கூறப்படுகிறது. அதேபோல ஜெர்மனி அமெரிக்காவில் இருந்து செய்யும் இறக்குமதியை விட அதிகமாக ஏற்றுமதி செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூடான் : 3 கோடிக்கும் அதிகமான  மக்களுக்கு உதவி தேவை

உலகின் மிக மோசமான வறுமை யால் பதிக்கப்பட்ட நாடாக சூடான் மாறியுள்ளது. தற்போது அங்கு 3 கோ டிக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபி மான உதவி தேவைப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் மற்றும் 1.5 கோடி குழந்தைகள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள். ஐ.நா அவை அமைப்புகளின் கூட்டறிக்கையில் சூடானில் நிலவும் நெருக்கடிக்கு அவசரமாக சர்வதேச அளவில் கவனம் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தெற்காசிய பிரந்திய மாநாட்டில்  டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு 

தென் கொரியாவில் அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய இரு நாட்கள் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சீனாவுடனான வர்த்தகப் பதற்றத்தை அமெரிக்கா அதிகரித்து வரும் நிலையில் இப்பேச்சுவார்த்தை அதனை தீர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முடக்கப்பட ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்கு கொடுக்கும் திட்டமில்லை

ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கிய பிறகு வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பல லட்சம் கோடி ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு இந்த சொத்துகளை கடனாக கொடுக்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வந்தன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒன்றுபட்ட முடிவுக்கு வராததால் அது நிறைவேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்குக்கரை : 40 குழந்தைகளை படுகொலை செய்தது இஸ்ரேல்

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத் தின் மேற்குக் கரையில் 2025 ஜனவரி முதல் 40 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. மேற்கு கரை மனிதாபிமான நிலைமை குறித்து ஐ.நா அவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து இது தெரிய வந்துள்ளது. 9 வயது குழந்தை உட்பட விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கூட இஸ்ரேல் சுட்டுப் படுகொலை  செய்துள்ளது எனவும் அவ்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.