பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் ஒகேனக்கல், ஜூலை 13 - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதி கரிக்கும் காலத்தில், ஆற்றில் வரும் நீர்வரத் தின் அளவைப் பொறுத்து பரிசல் துறை களில் பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியு றுத்தி ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ள தால் கடந்த 22 நாட்க ளுக்குப் பிறகு காவிரி ஆற்றில் பரிசல் இயக்கு வதற்கு மாவட்ட ஆட்சி யர் ரெ.சதீஸ் அனுமதி அளித்திருந்தார். பரிசல் ஓட்டிகள் முன் வைத்த கோரிக்கைகள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவைப் பொறுத்து மாமரத்துக்கடவு பரிசல் துறையில் 1,000 முதல் 8,000 வரை, ஊட்டமலை பரிசல் துறையில் 8 ஆயிரம் முதல் 30,000 வரை, சின்னாறு பரிசல் துறையில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நீர்வரத்து காலங்களில் பரிசல்கள் இயக்க அதி காரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அனுமதி அளிக்க வேண் டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். ஆண்டுக்கு அரசுக்கு 2 கோடி ரூபாய் வரு வாய் ஈட்டித் தரும் ஒகே னக்கல் தொழிலாளர்க ளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக் கும் 416 பரிசல் ஓட்டி களுக்கு அனுமதி அளிக் கப்பட்ட போதிலும், பரிசல் இயக்க மறுத்து வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி வேல், வட்டாட்சியர் பிர சன்ன மூர்த்தி, ஒகேனக் கல் காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர் பரிசல் ஓட்டிகளின் கோரிக்கை கள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்துள்ள னர். ஆனால் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து வேலைநிறுத்தம் நடை பெற்று வருகிறது. இதனால் ஞாயி றன்று பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின் னாறு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பய ணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.