விக்கிரவாண்டி டோல்கேட்டில் நாளை முதல் கட்டண உயர்வு
விக்கிரவாண்டி, ஆக.30 - விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் செப்.1 ஆம் தேதி முதல் பழைய சுங்க வரியில் சிறிய மாற்றங்களு டன் புதிய சுங்க கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டோல்பிளா சாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நகாய் உத்தரவின் பேரில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். திண்டி வனத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூரத் திற்கு உள்ள நான்கு வழிச்சாலைகளை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வே பிரை வேட் லிமிடெட் நிறுவனம் நிர்வகிக்கிறது. கட்டண விவரங்கள் கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றிற்கு ஒரு வழி கட்டணம் 105 ரூபாய், பல முறை பயணிக்க 160 ரூபாய், மாதாந்திர கட்டணம் 3,170 ரூபாய். இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் 185 ரூபாய், பலமுறை பயணிக்க 275 ரூபாய், மாதாந்திர கட்டணம் 5,545 ரூபாய். டிரக், பேருந்து ஒரு வழி கட்டணம் 370 ரூபாய், பலமுறை பயணிக்க 555 ரூபாய், மாதாந்திர கட்ட ணம் 11,085 ரூபாய். பல அச்சு வாகனம் இரு அச்சுகளுக்கு மேல் ஒரு வழி கட்டணம் 595 ரூபாய், பலமுறை பயணிக்க 890 ரூபாய், மாதாந்திர கட்டணம் 17,820 ரூபாய். பள்ளி பேருந்து மாதாந்திர கட்டணம் 1,000 ரூபாய், உள்ளூர் வாகன கட்டணம் வகை-1 மாதாந்திர பாஸ் 150 ரூபாய், வகை-2 மாதாந்திர பாஸ் 300 ரூபாய் என மாற்ற மின்றி வசூலிக்கப்பட உள்ளது.