இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : 13.89 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை, ஜூலை 11 - தமிழக அரசின் பல்வேறு துறைக ளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்பு வதற்கான போட்டித்தேர்வு சனிக் கிழமை (ஜூலை 12) காலை நடை பெறுகிறது. இந்த தேர்வை ஆண்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேர், பெண்கள் 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேர், மாற்றுப் பாலினத்தவர் 117 பேர் என ஒட்டுமொத்தமாக 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் எழுது கின்றனர். இதற்காக 38 மாவட் டங்களில் 314 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் 4,500 கண்காணிப்பா ளர்கள் ஈடுபடுகின்றனர்.