tamilnadu

img

வாய்ப்பு வாசல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-2ஏ :  645 பணியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 4 காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்நிலையில் குரூப் 2  மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவ தற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 625 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளனர். நடப்பாண்டில் நடத்தவிருக்கும் தேர்வுகளின் பட்டியல் மற்றும் உத்தேச தேதிகளை அட்டவணையாக பணியா ளர் தேர்வாணையம் வெளியிட்டிருந் தது. மற்ற தேர்வுகளுக்கு குறித்த நேரத் தில் அறிவிக்கையை வெளியிட்டு, தேர்வுகளை நடத்திக் கொண்டிருப்பது போலவே, இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையும் வெளியாகியுள்ளது. குரூப் 2 பணியில் 50 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் உதவி  ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் 2ஆம் நிலை, தனிப்பிரிவு உதவியா ளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர், புரபேஷனரி அலுவலர் ஆகிய பணி யிடங்கள் உள்ளன. குரூப் 2ஏ பணியில் 595 பணியிடங்களை நிரப்புகிறார்கள். இதில் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர்/இளநிலை கண் காணிப்பாளர், 3ஆம் நிலை உதவி யாளர், உதவியாளர், முதுநிலை வரு வாய் ஆய்வாளர், 3ஆம் நிலை செயல் அலுவலர், கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய பணியிடங்கள் காலியாக வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.  முழுமையான அறிவிக்கை மற்றும் கூடுதல் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.  வயது வரம்பு : ஒவ்வொரு பணியிடத் திற்கும் தனித்தனியான வரம்பு தரப்பட்டுள்ளது. அறிவிக்கையில் முழுமையான விபரங்கள் உள்ளன. மருத்துவ மற்றும் உடற்தகுதிகள் : வனவர், உதவி ஆய்வாளர் மற்றும்  புரபேஷனரி அலுவலர் ஆகிய பணி யிடங்களுக்கான தேர்வர்களுக்கு குறிப்பான தகுதிகள் தரப்பட்டுள்ளன. இவர்களுக்கும், மற்றவர்களுக்குமான தகுதிகள் அறிவிக்கையில் உள்ளது. தேர்வு முறை : இரண்டு கட்டமாகத் தேர்வுகள் இருக்கும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெறும். இந்தத் தேர்வில் கொள்குறி வகை வினாக்கள் 300 கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் வேறொரு தேதியில் முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். மேலே தரப்பட்டுள்ள இணைய தளம் வாயிலாக விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பலாம். விண்ணப்பத்தை நிரப்புவதற்கான கடைசித்தேதி ஆகஸ்ட் 13 ஆகும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களில் ஏதாவது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கான வாய்ப்பு ஆகஸ்டு 18 முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரையில் தரப்படும். மாற்றம் செய்யப்பட்டுள்ள குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுத் திட்டத்தைத் தேர்வர்கள் பார்த்துக் கொள்வது நல்லது. 

ரயில்வே துறையில் காலியிடங்கள் 6238

இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பணியாளர்களு க்கான (Technician) 6 ஆயிரத்து 238  காலியிடங்கள்  நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி : Technician grade 1 signal  என்ற பணிக்கு Electronics, computer science, information technology, instrumentation போன்ற ஏதாவது ஒரு பொறியியல் பாடப் பிரிவில் பட்டயம் (Diploma) அல்லது பட்டப்படிப்பு பெற்றிருத்தல் அவசியமாகும். Technician grade 3 என்ற பணிக்கு  Physics, Electronics, Computer Science, Information  Technology, Instru mentation போன்ற பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை(B.Sc) நிறைவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு : 18 முதல் 36 க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினரான இதர பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி., எஸ்.டி., தேர்வர்களுக்கு அரசு விதிமுறைகளின்படியான வயது வரம்புத் தளர்ச்சி இருக்கும்.  தேர்வு முறை : ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விப ரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியான வர்களுக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் : பொது  மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி., பெண்கள்,  சிறுபான்மையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.250 என்ற வகையில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.  விண்ணப்பிக்கவும், கூடுதல் விப ரங்களைப் பெறவும் www.indianrail ways.gov.in & www.rrbchennai.gov.in   என்ற இணையதளத்தைப் பார்வையிட லாம். விண்ணப்பத்தை நிரப்பக் கடைசித் தேதி ஜூலை 28, 2025 ஆகும்.