விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபிக்கு கடிதம்
சென்னை: தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரி ழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. தவெக சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது. சமீபத்தில் த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடை யில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார். இந்நிலையிலேயே, விஜய் கரூர் செல்ல அனுமதி கோரி டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும் பத்தினருடன் விஜய் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார் என்று தெரிவித்தார். விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப் பியுள்ளோம். டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் அனுமதி கேட்க இருக்கிறோம் என்று அருண்ராஜ் தெரி வித்தார்.
தவெக மாநகரச் செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிச லில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படு காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செய லாளர் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் கட்சியின் மாநகரச் செயலாளர் மாசி.பவுன்ராஜ் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, மதியழகனையும் அவருக்கு உதவியதாக மாசி.பவுன்ராஜையும் செப். 29 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அக்.6 அன்று மாசி. பவுன்ராஜ் சார்பில் ஜாமீன் மனு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், இன்னும் விசாரணை எதுவும் முழுமையடை யாமல் உள்ள நிலையில், மாசி.பவுன்ராஜூக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
ராமதாஸிடம் நலம் விசாரித்த திருமாவளவன்
ராமதாஸிடம் நலம் விசாரித்த திருமாவளவன் சென்னை: பாமக தலைவர் மருத்துவர் ராம தாஸ் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர் செங்குட்டுவேல் தலை மையிலான குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர். சிகிச்சை முடிந்து ராமதாஸ் தற் போது வீடு திரும்பியுள் ளார். இந்நிலையில், அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசிக தலைவர் திருமா வளவன் எம்.பி. நலம் விசா ரித்துள்ளார். முழுமையாக நலம்பெற வேண்டுமென வாழ்த்து தெரிவித்துள்ளார்.