tamilnadu

img

இராமநாதபுரத்தில் ஒரு மாத காலத்துக்கு மேலாக போராடிவரும்

இராமநாதபுரத்தில் ஒரு மாத காலத்துக்கு மேலாக போராடிவரும் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்களை ஆதரித்தும், சிஐடியு தொழிலாளர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் சிஐடியு மாவட்டக் குழுவின் சார்பாக மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி சிறப்புரையாற்றினார். நகர் போக்குவரத்து கிளை தலைவர் போஸ், செயலாளர் துரைப்பாண்டி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்கள் வாசுதேவன், மலைராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் பூமிநாதன், டாஸ்மாக் சங்க நிர்வாகி பால்ராஜ் ஆகியோர் ஆதரித்து பேசினர். இதில் சுமை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் போஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.