பெரம்பலூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு
பெரம்பலூர், ஜூலை 23- பெரம்பலூர் நகரம் மற்றும் மின்னரங்கம் கமிட்டி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்க திர் சந்தா சேர்ப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் நகரத்தில் தீக்கதிர் நாளிதழ் ஆண்டு சந்தா-7, ஆறுமாத சந்தா - 3, மொத்தம் 10 சந்தாவும், மின்னரங்கம் கமிட்டி சார்பில் ஆண்டு சந்தா-1 என சேர்க்கப்பட்டது. நிகழ்வில் தீக்கதிர் திருச்சி பதிப்பு மேலாளர் ஜெயபால், மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், ரெங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.