தாயுமானவர் திட்டத்திற்கான வசதிகளை நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஆக.23 - சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க 9 ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை திருச்சி பீமநகரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழக பொது தொழி லாளர் சங்க மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். சங்க கொடியை முன்னாள் மாநில துணைத் தலைவர் ஏ.முத்தையா ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணை பொதுச் செயலா ளர் கே.சண்முகம் வாசித்தார். மாநிலச் செயலாளர் என்.ராசப்பன் வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.ரெங்கரா ஜன் துவக்க உரையாற்றினார். ஆண்டறிக்கையை மாநில பொதுச் செயலாளர் ஆர். புவனேஸ்வரன் வாசித்தார். வரவு - செலவு அறிக் கையை மாநிலப் பொருளாளர் எம். ஏழுமலை சமர்ப்பித்தார். தீர்மானங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகத்தில் பணிபுரியும் கணினி ஊழியர்களுக்கு நிர்வாகமே நேரடி யாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும். ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். கிடங்குகளில் காலியாக உள்ள சுமைப்பணி தொழிலாளர்கள் பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணிபுரிந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும். கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர் களுக்கு இந்திய அரசின் பெட்ரோலி யம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் வழங்கப்படுகின்ற ஒரு சிலிண்டர்க்கு கூலியாக ரூ.33.43 வழங்க வேண்டும். பல ஆண்டு களாக பணியாற்றும் இந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஏற்படுகின்ற காலிப் பணி யிடங்களுக்கு 12 (3) ஒப்பந்தத்தின் படி தமிழகம் முழுவதும் பணிபுரி கின்ற பருவ கால பணியாளர்களை பணி மூப்பின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அயல் துறை அதிகாரிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும். எடை குறைவின்றி உணவுப் பொருட்கள் அங்காடிகளுக்கு வழங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். பொது விநியோகத்தில் உள்ள குறை களை உடனே அகற்ற வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள (தாயுமானவர் திட்டம்) மூத்த குடி மக்களுக்கு உணவு பொருள் முழு மையாக சென்றடைய அதற்குத் தேவையான அடிப்படை வசதி களை நிர்வாகம் தன்னுடைய சொந்த பொறுப்பில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக ப.குமார், பொதுச் செய லாளராக ஆர். புவனேஸ்வரன், பொருளாளராக எம்.ஏழுமலை, உதவி பொதுச் செயலாளர்களாக எம். சண்முகம், நா.ராசப்பன், துணைத் தலைவர்களாக வி.சுப்பு ராஜ், எஸ்.கதிரேச பாண்டியன், எம்.ராஜாங்கம், மாநிலச் செயலாளர் களாக ஏ.பாலசுப்பிரமணியன், அண்ணாதுரை, இளங்கோ, மணி மாறன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். சிஐடியு மாநில துணைத் தலை வர் ஆர்.தெய்வராஜ் நிறைவுரை ஆற்றினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க திருச்சி மண்டல தலைவர் எஸ்.வேலு நன்றி கூறினார்.