tamilnadu

img

‘உதய்’ திட்டத்தில் கையெழுத்திட்டவர் இன்று போலிக் கண்ணீர் வடிக்கிறார்

‘உதய்’ திட்டத்தில் கையெழுத்திட்டவர் இன்று போலிக் கண்ணீர் வடிக்கிறார்

எடப்பாடிக்கு பழனிசாமிக்கு டி.ஆர்.பி. ராஜா பதிலடி சென்னை, ஜூலை 30 -  “ஜெயலலிதா இருக்கும் வரை ஒன்றிய அரசின் ‘உதய் மின் திட்டத்தில்’ கையெழுத்து போட வில்லை. அவர் மறைந்த பிறகு ஒடோடிப் போய்  கையெழுத்துப் போட்டு, தமிழ்நாட்டை வஞ்சித்தது-  சந்துகளில் இருந்து குரல் கொடுக்கும் எடப்பாடி  பழனிசாமிதான் என்பது ஊருக்கே தெரிந்த போதும் இன்று அவரே மின்கட்டணம் உயர்ந்து விட்டது என நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். “ஒரு சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பூரண  நலம் பெற வேண்டும் என ‘சுந்தரா டிராவல்ஸ்’ யாத்திரையில் சொன்ன அதே எதிர்க்கட்சித் தலை வரின் நாக்குதான் இப்போது ‘மருத்துவமனை யில் டேபிள் மீட்டிங்’ என நர்த்தனம் ஆடுகிறது என்றும் டி.ஆர்.பி. ராஜா சாடியுள்ளார். அரசு அலுவல்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறுகிறதா என அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது, ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் மகத்தான திட்டத்திற்கான முகாம்கள் திட்ட மிட்டபடி நடைபெறுகிறதா என தலைமைச் செயலா ளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விவரங்கள்  கேட்பது, காணொளிக் காட்சி வாயிலாக மாவட்ட  ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவது போன்ற பணிகளை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் மருத்துவமனை யில் இருந்தபோதும் தொடர்ந்து தடையின்றி தனது மக்கள் பணியை செய்தார் முதல்வர் என்று  தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துள்ளத் துடிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் பலி வாங்கி விட்டு, “டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்” எனச் சொன்னவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று விமர்சித்துள்ளார். தானே ஏற்றிய மின் கட்டண உயர்வு குறித்து  தானே பேசிவரும் பழனிசாமி, ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன்  பேச அஞ்சுகிறார் என்றும் கேள்வி எழுப்பியிருக் கும் அமைச்சர், 2014 ஆம் ஆண்டு 414 ரூபாயாக இருந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது  868.50 ரூபாயாக உயர்ந்து வளர்ந்து நிற்பது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாதா என்று கேட்டுள்ளார்.