tamilnadu

img

‘பத்திரிகையாளர்களுக்கு முன்னுதாரணம் தீக்கதிர்’

மதுரை, ஜுன் 28  தீக்கதிர் நாளிதழின் வைரவிழா துவங்கு வதையொட்டி, தீக்கதிருடன் நெருக்கமான தோழமையை பேணி வருகிற கேரள இடதுஜனநாயக முன்னணி வாழ்த்து தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கோடியேறி பாலகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில், 60 ஆண்டுகளை எட்டியுள்ள தீக்கதிர் நாளிதழ் திசையெட்டும் முற்போக்கு கருத்துக்களை பரப்புவதில் இன்னும் உயரமான உத்வேகங்களை எட்டட்டும் என  தெரிவித்துள்ளார்.  கேரளத்தில் உழைப்பாளி மக்களின்  உரிமைக்குர லாக ஓங்கி ஒலித்துவரும் தேசாபிமானி நாளிதழ் தனது  80ஆம் ஆண்டை கொண்டாட இருக்கும் தருணத்தில், தமிழகத்தில் தீக்கதிர் நாளேடு தனது வைரவிழாவைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இ.பி.ஜெயராஜன்

இடது ஜனநாயக முன்னணியின் அமைப்பாள ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு  உறுப்பினருமான இ.பி.ஜெயராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “1963ஆம் ஆண்டு கோயம்புத் தூர் மில் தொழிலாளர்களின் பங்களிப்புடன் சென்னை யிலிருந்து அச்சாகத் துவங்கிய தீக்கதிர் ஏடு, தனது  பயணம் முழுவதிலும் தொழிலாளர் வர்க்க மக்களின்  குரலை ஓங்கி ஒலித்த மகத்தான வரலாற்றைக் கொண்  டது.  அது மட்டுமல்ல, தனது வாசகர்களிடையே முற் போக்கு சிந்தனைகளையும் மூடநம்பிக்கைகளுக்கு எதி ரான அறிவியல் கருத்துக்களையும் இடைவிடாமல் பரப்பி வருகிறது. 60 ஆண்டு காலத்தில் நான்குப் பதிப்பு கள் மற்றும் டிஜிட்டல் பதிப்பையும் துவக்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் செய்தி ஏடாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்  ளது. பத்திரிகையாளர்கள் எப்படி மக்கள் பிரச்சனை களை அணுக வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரண மாக தீக்கதிர் திகழ்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் அவற்றுக்குச் சொந்தமான முதலாளிகளின் நலன்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் சூழலில்,  தீக்கதிர் முற்றிலும் மாறுபட்ட தளத்தில், முழுக்க முழுக்க மக்கள் நலனுக்கான பாதையில் பயணிக்கிறது. இடது சாரி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் உண்மை யான அமைப்பாளராக, பிரச்சாரகராக தீக்கதிர் தொடர்ந்து பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொள்ள வைரவிழா கொண்டாட்டங்கள் உற்சாகமளிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

கே.என்.பாலகோபால்

கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தனது  வாழ்த்துச் செய்தியில், தீக்கதிர் தமிழ் நாளிதழ் அறு பதாம் ஆண்டு விழாவையொட்டி ஒரு சிறப்பு  பதிப்பை வெளியிடுகிறது என்பதை அறிந்து மிக்க  மகிழ்ச்சி. அறுபதாம் ஆண்டு விழாவைக் கொண்டா டும் தீக்கதிர் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

;