tamilnadu

குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!

குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!

தமிழக அரசுக்கு இளைஞர்கள் கோரிக்கை

சென்னை, அக். 24 - குரூப்-4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, இளைஞர்கள், மாணவர்கள் மத்தி யிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. காலியாக இருக்கும்  3 லட்சம் பணியிடங்கள் 2025ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, ஜூலை 12  அன்று தேர்வு நடந்தது. ஏறக்குறைய 11 லட்சத்திற்கும் மேற்பட்ட இளை ஞர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் 22.10.2025 அன்று  வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4662 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்கள் உள்ளன. இந்த ஆண்டு நிலவரப்படி 30 லட்சத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். குரூப்- 4  பிரிவில் அதிக அளவு காலிப்பணி யிடங்கள் உள்ளன. இந்நிலையில், 4662 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப் படும் என்ற அறிவிப்பு சரியானதல்ல என்று இளைஞர்கள் கருதுகின்றனர். ஆண்டுக்காண்டு  குறையும் நியமனங்கள் 2022-ஆம் ஆண்டு 10,178 பணி யிடங்கள் நிரப்பப்பட்டன. 2024 ஆம் ஆண்டு குரூப் 4 பிரிவில் சுமார் 9532  பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில் 2025-ஆம் ஆண்டு, வெறும் 4662 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வந்தபோதே எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்தது.  படித்து முடித்த இளைஞர்கள் சமூக பாதுகாப்பான வேலை யில்லாமல் தனியார் துறையில், கிடைக்கின்றன வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அரசு இதனை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். மாறாக, ஆண்டுக்கு ஆண்டு குரூப்  4 பணியிடங்கள் மூலம் நிரப்பப் படும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை யளிக்கும் விஷயமாகும் என்றனர். தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்ற வேண்டும் 2021-ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் 5 ஆண்டுகளில் ஆட்சி முடியும் நிலையில், இதுவரை 3 லட்சம் பணி யிடங்கள் நிரப்பப்படவில்லை என்ப தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்ற  னர். இரண்டு நாட்களுக்கு முன்பாக குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், பணி யிடங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கமும் எழுப்பி யுள்ளது. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக கூடுதல் காலிப்பணிடங்களை அறிவித்து, அதற்கேற்ப பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநி லத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகி யோர் அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு 6244 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு அறிவிக்கப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு இறு தியாக 9532 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆகையால் தமிழ் நாடு அரசு உடனடியாக காலிப்பணி யிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.