பி.கந்தசாமி-பொற்கொடி தம்பதியரின் புதிய இல்லம் மாநிலச் செயலாளர் பெ. சன்முகம் திறந்து வைத்தார்
மன்னார்குடி, ஆக. 28- கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான பி. கந்தசாமியின் புதிய இல்ல திறப்பு விழா, நீடாமங்கலம் ஒன்றிய வையகளத்தூரில் வியாழனன்று நடைபெற்றது. விழாவிற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி நாகராஜன் முன்னிலை வகித்தார். தோழர் பி. கந்தசாமியின் புதல்வி க. பிருதிகா அனைவரையும் வரவேற்றார். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், புதிய இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னத்துரை, மார்க்ஸ்-ஜென்னி குடும்ப நூலகத்தை திறந்து வைத்தார். விழாவில், கட்சியின் மூத்த தலைவர் என். சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைகமிட்டி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இல்ல திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் க. சுருதிகா நன்றி கூறினார்.