tamilnadu

img

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனு கொடுத்த சிறிது நேரத்தில் நூறு நாள் வேலை அட்டை வழங்கிய அமைச்சர்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனு கொடுத்த சிறிது நேரத்தில்  நூறு நாள் வேலை அட்டை வழங்கிய அமைச்சர்

மாற்றுத்திறனாளி பெண் நெகிழ்ச்சி

தஞ்சாவூர், ஆக.20 - ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், மனு கொடுத்த சிறிது நேரத்திலேயே நூறு நாள் வேலைத்திட்ட அட்டையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வழங்கினார்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ரெட்டவயல் கிராமத்தில் புதன்கிழமை  உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.  அப்போது அருகில் உள்ள கொளக்குடி கிராமத் திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக அவ்வழியாகச் சென்ற, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னறிவிப்பின்றி உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்றார்.  இதையடுத்து அவரை அலுவலர்கள் மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் முகாமை துவங்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசுத் திட்டங்கள் பற்றி  பேசினார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி, ஒவ்வொரு அரசுத் துறை ஸ்டால் களையும் சென்று பார்வையிட்டு, புறப்பட தயாரான போது, அங்கு வந்த கொளக்குடி பகுதியைச் சேர்ந்த எம்.காம், எம்.ஃபில் படித்த மாற்றுத்திறனாளி பெண் தீபிகா, ‘தனக்கு நூறு நாள் வேலை திட்ட அடை யாள அட்டை வேண்டும்” என அமைச்சரி டம் கோரிக்கை விடுத்தார்.  இதையடுத்து, அலுவலர்களை அழைத்து  பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறிய தோடு, அங்கேயே காத்திருந்தார். அரசு அலு வலர்களும் நூறு நாள் வேலைத்திட்ட அடை யாள அட்டையை அமைச்சர் முன்பு உடனடி யாக 5 நிமிடத்தில் தயார் செய்தனர்.  பின்னர் மாற்றுத்திறனாளி பெண் தீபிகா விடம் அடையாள அட்டையை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இதனால் நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி பெண் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.