ஊரே ஒன்று திரண்டு நடத்திய மாபெரும் மக்கள் போராட்டம் வெற்றி மானாமதுரை மருத்துவக் கழிவு ஆலையை மூட அதிகாரிகள் உறுதி
சிவகங்கை, செப்.16 - சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற் சாலையை மூடக் கோரி நடந்த வரலாற்று முற்றுகைப் போராட்டம் மகத்தான வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட மூவா யிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நடத்திய இந்த எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவாக, நச்சுக் கழிவு ஆலை இரண்டு மாதத்தில் முற்றிலும் மூடப்படும் என்பதை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். இதுவரை நடந்துவந்த கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகளின் ஒற்றுமையான போராட்டம் வழக்கறிஞர்கள் சங்கம், ஹோட்டல் பேக்கரி உரிமையாளர்கள் நலச்சங்கம், மானாமதுரை விநியோகஸ்தர்கள் சங்கம், திருமுருகன் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம், பழைய பேருந்து நிலைய காய்கறி, பழங்கள், பூ வியாபாரி கள் சங்கம், புதிய பேருந்து நிலைய காய்கறி, பழங்கள், பூ வியாபாரிகள் சங்கம், அனைத்து ஆட்டோ சங்கங்கள், அனை த்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை, மருந்து வணிகர்கள் சங்கம், எலக்ட்ரிசியன் & பிளம்பிங் வேலை பார்ப்போர் நலச் சங்கம், மருத்துவர் நலச்சங்கம், பந்தல் ஒலி ஒளி அமைப்பாளர் நலச்சங்கம் என பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் பங்கேற்றன. அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைந்த போராட்டம் இந்த மக்கள் போராட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து நின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்க பூபதி, அய்யம்பாண்டி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் முனியராஜ், பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, மானாமதுரை நகர்மன்ற உறுப்பினர் நாமகோடி, காங்கிரஸ் மானா மதுரை நகர் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் புருஷோத்தமன், காங்கிரஸ் கட்சியின் பால்செல்லத்துரை, தமிழக வெற்றி கழகம் நகர செயலாளர் நம்பி ராஜன், தமிழக தேவேந்திர முன்னேற்றக் கழகத்தின் பரமசிவம், சிவசங்கரி, நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வகண்ணன், சங்கு முனியாண்டி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் வீரய்யா, முரு கானந்தம் ஆண்டி, தேவதாஸ், காசிராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நச்சுப் புகையால் ஏற்படும் அபாயம் பதின்மூன்று மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் கொண்டுவந்து சுத்திகரிப்பு என்ற பெயரில் எரிக்கப்பட உள்ளதால், வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகும். ரசாயனம் கலந்த கழிவு நீரால் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடும். நீர்நிலைகள் மாசுபட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலையும் அபாயம் உள்ளது. சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள மானாமதுரை மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் அபாயம் மக்களை கவலை யில் ஆழ்த்தியது. ஏ.முக்குளம் கிராமத்தின் கொடுமையான அனுபவம் விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளம் கிராமத்தில் இதே மாதிரியான ஆலையில் வெளியேற்றிய நச்சுக் காற்றால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு, பெண்களின் கருச்சிதைவு, சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பல பெண்கள் கணவனை இழந்து வாழும் நிலை தொடர்கிறது. அந்த பகுதி மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த ஆலை மூடப்பட்டது. ஏ.முக்குளம் பகுதி மக்கள் பட்ட கஷ்டம் நமது குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் மானாமதுரை மக்கள் ஒற்றுமையாக நின்றார்கள். காவல்துறையின் தடுப்பை மீறிய மக்கள் போராட்டம் தொடங்கியவுடன் பல்லா யிரக்கணக்கான மக்கள் காவல்துறையின் தடுப்பை மீறி சிப்காட் வளாகத்தை நோக்கி திரண்டனர். காவல்துறை கண்காணிப்பா ளர் சிவபிரசாத், சிவகங்கை கோட்டாட்சியர் செபிகிரேசியா, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் ஆகியோர் போராட்டக்காரர்களை சிப்காட் வளாகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். மாபெரும் கடை அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. வர்த்த கர்களின் ஒத்துழைப்புடன் நடந்த இந்த கடை அடைப்பு, மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. பேச்சுவார்த்தையில் மகத்தான வெற்றி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் தலைமை யில் நடந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிர சாத், கோட்டாட்சியர் செபிகிரேசியா, போராட்டக் குழு கன்வீனர் கே.வீரபாண்டி உள்ளிட்ட அனைத்துக் கட்சி மற்றும் சங்கத் தலைவர்களும் கலந்துகொண்டனர். வர்த்தக சங்கத் தலைவர் பாலகுருசாமி, ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் பிரேம்சந்திரன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் தீனதயாளன் ஆகி யோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற னர். இந்தப் பேச்சுவார்த்தையின் நிறை வாக, மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற் சாலை இரண்டு மாதத்தில் மூடப்படும் என்றும், மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலை கட்டுமானப் பணி இன்று முதல் நடைபெறாது என்றும் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். வர்த்தக சங்கத்தின் பொதுநல சேவை போராட்டத்தில் ஈடுபட்ட ஐயாயிரத்து க்கும் மேற்பட்ட மக்களுக்கு வர்த்தக சங்கத் தலைவர் பாலகுருசாமி குடிநீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கி பாராட்டுக்குரிய சேவை செய்தார். நேரடி ஆய்வு போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தை யை தொடர்ந்து, மருத்துவக் கழிவு சுத்தி கரிப்பு தொழிற்சாலையை போராட்டக் குழு வினர், பாலகுருசாமி, முனியராஜ் ஆகி யோர் நேரில் சென்று பார்வையிட்டு வந்தனர். வரலாற்று வெற்றி இந்த வெற்றி, மக்கள் ஒன்றிணைந் தால் எத்தகைய பெரிய சக்தியையும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு சாட்சியாக நின்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மானாமதுரை மக்களின் இந்த வரலாற்றுப் போராட்டம் விளங்கும். - ஜே.ராமச்சந்திரன்
