tamilnadu

img

புவியைக் காப்போம் - இ.பாலகிருஷ்ணன்

“மனிதன் தன் சவக்குழியை தானே தோண்டுகிறான்” என்று ஐ.நா சபை பொதுச் செயலாளர் அந்தோனியே குத்தெரஸ் ஐ.நாவின் 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசும் போது கவலை யோடு குறிப்பிட்டார். இம்மாநாடு பிரிட்டன்-ஸ்காட்லாந்து-கிளாஸ்கோ நகரில் அக்டோபர் 31 முதல்  நவம்பர் 12 வரை 13 நாட்கள் நடைபெற்றது.  இம்மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்துகொண்டு 2030-க்குள் கார்பன் மாசை 50% குறைப்போம் என்றும் 2070-க்குள் கார்பன் மாசை வெளியிடுவதை முழுமையாக குறைப்போம் என்றும் பேசி யுள்ளார். ஆனால் உலகிலேயே கார்பன் மாசை அதிகமாக வெளியிடும் எந்த நாடும் உத்திரவாதம் கொடுத்ததாக தெரிய வில்லை. இதனால் 13 நாட்கள் நடந்த ஐ.நா வின் 26-வது பருவநிலை மாற்ற மாநாடு தோல்வியில் முடிந்ததாக பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

ஆனால் இதற்கு காரணமாக 250 ஆண்டு களுக்கு மேல் கார்பன் மாசை வெளியிட்டு  பூமியை நாசப்படுத்தியுள்ள அமெரிக்கா மற்றும் மாசை அதிகமாக வெளியிடும் வளர்ந்த நாடுகளை கண்டிக்க மறுக்கின்றன. பூமியின் வெப்பநிலை தொழிற் புரட்சிக்குப் பிறகு 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்று கணக்கிடுகின்றனர். இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட் டுள்ளது என்றும் அதனால் உலக மக்களுக்கு  பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் 1988-ல் கண்டறிந்தனர். அது முதல் ஐநா வின் முயற்சியால் தொடர்ந்து பருவநிலை மாற்ற மாநாடு நடந்து வருகிறது. ஐநாவின் கடுமையான முயற்சி களுக்குப் பின்பு 2015ல் பாரீசில் நடந்த பருவ நிலை மாற்ற மாநாட்டில் 2030-க்குள்  தொழிற்புரட்சிக்குப் பிறகு உயர்ந்திருக்கிற வெப்பநிலையை குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை நிறைவேற்றுவதில் கார்பன் மாசை அதிகமாக வெளியிடும் நாடுகள் போதுமான அக்கறை காட்டவில்லை. ஐநாவின் 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் உலகிலேயே தனி நபரின் அடிப்படையில் அதிகமாக கார்பன் மாசை வெளியிடும்  அமெரிக்கா அறிவித்திருக்க வேண்டும். அடுத்ததாக நீண்ட கால மாக கார்பன் மாசை வெளியிடும் வளர்ந்த நாடுகள் அறிவித்திருக்க வேண்டும். அது  நடக்கவில்லை.142 கோடி மக்கள் தொகை யுள்ள சீனா தனிநபர் அடிப்படையில் 2-வது இடத்தில் இருந்தாலும் மக்களின் வளர்ச்சிக் காக சுமார் 50 ஆண்டுகளாகத்தான் நடந் துள்ளது. 250 ஆண்டுகளுக்கு மேல் கார்பன் மாசை வெளியிடும் வளர்ந்த நாடுகளையும் சீனாவையும் ஒப்பிடுவது நியாயமில்லை. 138 கோடி மக்கள் கொண்ட இந்தியா 14-வது இடத்தில் உள்ளது. கார்பன் மாசை குறைக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதை அளவில் 2021ல் நடந்த நிகழ்வுகள்  காட்டுகின்றன. 

2021 பிப்ரவரி 2-வது வாரத்தில் உத்திர காண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற் கையை அழித்ததால் ஏற்பட்ட கோர சம்பவம் கார்பன் மாசை உடனடியாக குறைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் துணை ஆறுகளில் ஏற்பட்ட  திடீர் வெள்ளத்தால் அப்பகுதி நீர்மின்சார திட்டங்களுக்காக வேலை செய்து கொண்டி ருந்த 170க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். இதில் குறைந்த அளவே இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இமயமலையில் வெப்பநிலை அதிகரித்த தன் காரணமாக நந்தாதேவி பனிச்சிகரம் 14  கி.மீபரப்பளவுக்கு வெடித்துச் சிதறியதால் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. 2021 பிப்ரவரி 3-வது வாரத்தில் அமெ ரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பனிப் பொழிவால் அந்த மாநிலமே நடுங்கியது. தண்ணீர் குழாய்கள்  வெடித்து சிதறின. தண்ணீர் பைப்பை திறந்தால் தண்ணீர் வரவில்லை.பனிக்கட்டி  தான் விழுந்தது. நீர் உறைநிலைக்கு போய் விட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது இந்த நிலை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்ததால் மக்கள் தண்ணீர் இன்றி தவித்தனர். மின்சா ரம் இல்லாமல் இருளில் வாழ்ந்தனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் 2021 ஜூன் மாதத்திற்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று வீசிய  காலங்களில் வடமாநிலங்கள் சிலவற்றில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இடி மின்னலால் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். டில்லி, மும்பை, சென்னை உள்பட பல நகரங்களில் அளவுக்கு அதிக மாக மழை பெய்துள்ளது. கேரள மாநி லத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இக்காலத்தில் ஐரோப்பா நாடுகள் மற்றும் சீனாவில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதற்கு தகுந்தாற்போல் வடி கால் வசதி இல்லாததால் மக்கள் துன்பத் திற்கும் துயரத்திற்கும் உள்ளாகினர். வட கிழக்கு பருவக்காற்று காலத்தில் சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை பகுதி யில் அதிகமான மழையால் மக்கள் பாதிக்கப் பட்டனர். விவசாயம் மிகப்பெரிய பாதிப் புக்கு உள்ளானது. 2021 தீபாவளிக்கு பிறகு டில்லியில் கார்பன் மாசு அதிகரித்ததன் கார ணமாக கல்வி நிறுவனங்கள், அலுவல கங்கள் மூடப்பட்டன. 2021 டிசம்பரில் பெய்த மழையால் மலே சியா தண்ணீரில் மிதக்கிறது என்று பத்திரி கைகள் எழுதின.2021 டிசம்பரில் அமெரிக்கா வில் வீசிய சூறாவளியால் 5 மாகாணங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடம் இடிந்து 6 பேர் பலியாகினர். உலகில் சில நாடுகளில் உள்ள காடுகள் தீப்பற்றி எரிந்து பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்த நாடுகள் சுமார் 250 ஆண்டு களுக்கு மேல் தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து கார்பன் வெளியிட்டு பூமியை நாசப்படுத்தியுள்ளது. தொழிற் புரட்சிக்குப் பிறகு பொருட்கள் உற்பத்தி மலைபோல் குவிந்தன. பொருட்களை விற்ப தற்கு சந்தைகளைத் தேடினர். சந்தையை  உறுதிப்படுத்த நாடுகளை அடிமைப்படுத்தினர். இந்த நாடுகளிலிருந்து பொருள் உற் பத்திக்கு தேவையான கச்சாப் பொருட் களை அடிமாட்டு விலைக்கு வாங்கி விவ சாயிகளை கசக்கி பிழிந்து அந்த நாட்டு மக்களை ஈவு இரக்கமின்றி சுரண்டினர். ஆட் சியை எதிர்த்தவர்களை கொன்று குவித்த னர். இவர்களின் பழைய வரலாற்றைப் புரட்டினால் இரத்த வாடை தான் வீசும். வளரும் நாடுகளிலிருந்து கொண்டு சென்ற செல்வத்தை வைத்து வளர்ந்த நாடு கள் தங்கள் நாட்டில் அடிப்படை வசதி களை மேம்படுத்திக்கொண்டனர். அடிமைப்பட்டு கிடந்த நாடுகள் சுதந்தி ரம் அடைந்த பிறகும் உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனம் மூலம் மிரட்டி வளர்ந்த நாடு களைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகள் இன்றும் வளரும் நாடுகளை சுரண்டு கின்றனர்.

அந்த நாடுகளின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர். எதிர்த்தால் மக்கள் ஆதர வோடு ஆட்சிக்கு வந்த அரசை கவிழ்க்கின்ற னர். தங்களுக்கு எடிபிடியான அரசை  உருவாக்க நினைக்கின்றனர். இதுதான் நடந்து கொண்டிருக்கிற வரலாறு இதிலி ருந்து வளரும் நாடுகள் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பூமியை பாதுகாப்ப தற்கு வளர்ந்த நாடுகள் வெளியிடும் கார்பன்  மாசை முதலில் குறைக்க வேண்டும். தொழிற்புரட்சி (1750) ஏற்பட்ட காலத்திலி ருந்து 2020 வரை அமெரிக்கா வெளியிட்ட கார்பன் மாசு 4 லட்சம் மெட்ரிக் டன், சீனா  3.5 லட்சம் மெட்ரிக் டன், இந்தியா 2.34 மெட்ரிக் டன். தனிநபர் அடிப்படையில் ஆண்டுக்கு அமெரிக்கா வெளியிட்ட கார்பன் மாசு 15.52  மெட்ரிக் டன், சீனா 3.8 மெட்ரிக் டன், இந்தியா  1.91 மெட்ரிக் டன் ஆகும்.

எனவே முதல் இடத்திலுள்ள அமெ ரிக்கா 2030-க்குள் 50% குறைக்க வேண்டும். 2050க்குள் முழுமையாக குறைக்க வேண் டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து உலகமக்கள் போராட வேண்டும் நிர்பந் திக்க வேண்டும். வளரும் நாடுகள் 2030-க்குள் 50% குறைக்க வேண்டும் என்றும் 2070-க்குள் முழுமையாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம். இந்தியா இதற்கு உதாரணமாக உள்ளது. பூமியில் கார்பன் மாசை உடனடியாக குறைக்க வேண்டும். காடுகளை விரிவு படுத்த வேண்டும் என்ற முழக்கத்தோடு பய ணித்தால் மட்டுமே உலக மக்களை பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் அழிவிலி ருந்து பூமியை காப்பாற்றலாம். இது இன்றைய அவசியத் தேவையாகும்.