tamilnadu

பூம்புகாரின் பெருமையை  வெளிக் கொணர்வோம்!  முதலமைச்சர் பதிவு

பூம்புகாரின் பெருமையை  வெளிக் கொணர்வோம்!  முதலமைச்சர் பதிவு

சென்னை, செப். 20- சங்க காலத்தில் தமிழர்களின் முக்கிய துறைமுக மாக இருந்த பூம்புகார் குறித்து ஆய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்க காலத்திற்கும்  பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும், மிகப்பெரிய கடல் வாணிப துறைமுகமாக இருந்த  காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து  ஆராயும் பொருட்டு ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன்  தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடலுக்கு அடியில்  ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியை பேராசிரியர் கே. ராஜன் தலைமையில், தொல்லியல் துறை இணை  இயக்குநர் சிவானந்தத்தை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கீழடி நம் தாய்மடி என சொன்னோம்! இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்! அடுத்து, ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவி யும், காலின் வந்த கருங்கறி மூடையும்...’ என நிறைந்து  வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொ