சென்னை, அக்.10- தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் தொழில் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய நாகை மாலி, “தமிழ்நாட்டில் 5 லட்சத்து 80 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங் கள் இருப்பதாக தெரிகிறது. இந்த தொழில் சமீபகாலத் தில், ஜிஎஸ்டி வரியால், மின்சார நிலைக் கட்டணம் என்ற பெயரில் மின் கட்டண உயர்வு மற்றும் பீக் அவர் மின் கட்டண உயர்வால் கடு மையாக பாதிக்கப்பட்டுள் ளது. சிறு,குறு தொழில்கள் பாதிக்கப்படுவதோடு அதில் பணியாற்றக்கூடிய லட்சக்கணக்கான தொழி லாளர்கள் பாதிக்கப் படுகிறார்கள். எனவே, இது குறித்து அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன்,“தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் இந்த கட்டணம் 53 விழுக்காடு வரைக்கும் உயர்த்தப்பட்டது. முந்தைய ஆட்சியின் மிக மோசமான நிதி நிலைமையில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்தது. இந்த நிலையில் ஒன்றிய பாஜக அரசு வரியை உயர்த்தியதால் மேலும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. தற்போது, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் குறைவாகத்தான் வசூலிக்கிறோம். இருந்தா லும், உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப் படும்”என்றார்.