world

img

இஸ்ரேல் - ஈரான் போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது ஏமன்!

இஸ்ரேல் - ஈரான் போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டதாக ஏமன் ராணுவம் அறிவித்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் போரில் தற்போது அமெரிக்கா ஈரான் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டதாக ஏமன் ராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏமன் ராணுவ அதிகாரி பேசும்போது; நாங்கள் செங்கடலில் உள்ள அனைத்து அமெரிக்கக் கப்பல்களையும், போர்க்கப்பல்களையும்  தாக்குவோம். உங்கள் கப்பல்களை எங்கள் செங்கடல் பகுதியிலிருந்து இருந்து விலக்கி வையுங்கள் என மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.