குஜராத் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்!' 12 மணி நேரம் வேலை; பெண்களுக்கு இரவுப் பணி
சிபிஎம் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தல் புதுதில்லி, ஜூலை 5- தொழிற்சாலைச் சட் டத்தை திருத்தும் குஜராத் அரசின் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் சில முக்கிய பிரிவுகளை குஜ ராத் அரசு மாற்றியமைத் ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசி யல் தலைமைக் குழு கடுமை யாக கண்டிக்கிறது. பாஜக அரசு அவசரச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி ஜூலை 1 அன்று தொழிற் சாலை (குஜராத் திருத்தம்) அவசரச் சட்டம், 2025-ஐ அறிவித்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் தொழிற் சாலை தொழிலாளர்களின் பணி நேரம், தற்போதைய ஒன்பது மணி நேரத்திலி ருந்து பன்னிரண்டு மணி நேர மாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் பெண் தொழிலாளர் களை இரவு வேலையில் அமர்த்துவதற்கு வகை செய்யப்படுகிறது, ஆனால் அவர்களின் பாதுகாப்பு மற் றும் அது சார்ந்த கவலை களுக்கு போதுமான ஏற்பாடு கள் செய்யப்படவில்லை. பத்து மத்தியத் தொழிலா ளர் சங்கங்கள் அறிவித்த பொது வேலைநிறுத்தத் திற்கு முன்னதாக இந்த அவ சரச் சட்டத்தை அறிவித்தது, தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் அவர்களின் கோரிக் கைகள் மீதும் பாஜகவின் அவமதிப்பையே பிரதி பலிக்கிறது. இது அதன் எதேச்சதிகாரத்தின் மற் றொரு எடுத்துக்காட்டு. ‘வணிகம் செய்வதை எளிதாக்குதல்’ என்ற பெய ரில் குஜராத் பாஜக அரசு தொழிலாளர்களுக்கு வழங் கப்பட்ட சில அடிப்படை பாது காப்புகளை நீக்குவதில் மட்டுமல்லாமல், தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்ட தற்போதைய பாதுகாப்பு நட வடிக்கைகளை கூட நடை முறைப்படுத்துவதில் தோல்வியடைந்ததிலும் தான் பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்திற்கு சிபிஐ(எம்) தனது ஆதரவை மீண்டும் தெரிவிக்கிறது. குஜராத் அரசு உடனடி யாக இந்த அவசரச் சட் டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்து கிறது. பொது வேலை நிறுத்தத்தை வெற்றியடை யச் செய்வதன் மூலம் அர சுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்குமாறு குஜராத் உள்ளிட்ட நாட்டின் தொழி லாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.