ஆசிரியர்களை அரசு கைவிடாது!
திருச்சிராப்பள்ளி, செப். 2 - ஆசிரியர் பணி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என் றும் ஆசிரியர்களை அரசு கை விடாது என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரிய ராகப் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெற வும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் ஓய்வு பெற ஐந்து ஆண்டு கள் மட்டுமே இருந்தால் அவர்கள் மட்டும் பணியைத் தொடரலாம் என்றும், ஐந்து ஆண்டு களுக்கு மேல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபற்றி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் முதல் அனைத்து செயலாளர்களுடன் இதுபற்றி கலந்து ஆலோசித்ததாக தெரிவித்தார். தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தவுடன் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுப்பதாகவும், ஆசிரியர்கள் அனைவருக்குமே அரணாக தமிழக அரசு இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.