tamilnadu

img

புத்தொழில் மையமாக தமிழகத்தை கட்டமைப்பதே அரசின் கனவு

புத்தொழில் மையமாக தமிழகத்தை கட்டமைப்பதே அரசின் கனவு! 

முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் பேச்சு

கோயம்புத்தூர், அக். 9 - உலகின் புத்தொழில் மையமாக தமிழ கத்தை கட்டமைப்பதே தமிழக அரசின் கனவு என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். கோயம்புத்தூர் கொடிசியா மைதானத் தில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று (அக்.9) தொடக்கி வைத்தார்.  42 நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள், 30 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து  கொள்ளும் இந்த மாநாட்டில் சிறப்புரை யாற்றிய முதல்வர் ஸ்டாலின், தொழில்துறை  மாநாடுகளால் தொழில் வளர்ச்சி மட்டு மின்றி மாநிலத்தின் ஒட்டுமொத்த துறையும் வளர்ச்சி அடைகிறது என்றார். வேலை வாய்ப்பு அதிகரிப்பதால் குடும்பங்கள் வளர்ச்சி அடைகின்றன. அமைதியான, சட்டம் - ஒழுங்கு சிறப்பான மாநிலங்களுக்குத் தான் தொழில்துறையினர் வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிக வேலைவாய்ப்புகள், முதலீடு களை ஈர்க்கக் கூடிய தொழில்துறையினரை கடந்த நான்கரை ஆண்டுகளில் ஈர்த்துள்ள தாக முதல்வர் தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் முனைப்புடன் அரசு செயல்படுவதாகவும் அவர் கூறினார். பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திற னாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு அரசின் தொழில்முனைவோர் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார்.  தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முன்பைவிட 6 மடங்கு புத்தொழில் நிறு வனங்கள் மத்திய அரசின் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி னார். 2,032 ஆக இருந்த புத்தொழில் நிறு வனங்களின் எண்ணிக்கை 12,000ஐ கடந்து ள்ளதாகவும், இதில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பெண்கள் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்களாக உள்ளன என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சிறந்த புத்தொழில் கொண்ட மாநிலங் களின் தரவரிசைப் பட்டியலில், 2018 இல் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், 4 ஆண்டு களில் 2022-ஆம் ஆண்டு முதலிடத்துக்கு முன் னேறியுள்ளது என்று அவர் பெருமையுடன் தெரிவித்தார். கோவையில் அடுத்த மாதம் ரூ.175 கோடியில் செம்மொழிப் பூங்காவை திறக்க உள்ளதாகவும், விரைவில் பெரியார் நூலகம், கிரிக்கெட் ஸ்டேடியம் என அடுத்தடுத்து திறக்க உள்ளதாகவும் முதல்வர் கூறினார்.