tamilnadu

img

கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநாடு துவங்கியது!

கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநாடு துவங்கியது!

திருப்பூர், அக்.5- இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநில 10 ஆவது மாநாடு திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் ஞாயிறன்று துவங்கி யது. காங்கேயம் பூமாலை நினைவ ரங்கில் (வெங்கடேஸ்வரா திருமண மண்டபம்), தோழர்கள் எஸ்.ஆறு முகம், மனோகரன் நினைவு நுழைவா யில் அருகே, சங்கத்தின் மாநில சிறப்பு  தலைவர் ஆர்.சிங்காரவேலு மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.  மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் கே.பி.பெருமாள் தலைமை ஏற்றார்.  வரவேற்புக் குழு தலைவர் கே.ரங்கராஜ்  வரவேற்றார். இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்  செயலாளர் யு.பி.ஜோசப் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சம்மேளன மாநில பொதுச் செயலாளர் டி.குமார்  வேலை அறிக்கையை முன்வைத்தார். பொருளாளர் லூர்து ரூபி வரவு-செலவு அறிக்கையை முன் வைத்தார்.  தொடர்ந்து, இரண்டாவது நாளான திங்களன்று (அக்.6) சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வாழ்த்திப் பேசுகிறார். சிஐடியு துணை  பொதுச் செயலாளர் வி.குமார் நிறை வுரையாற்றுகிறார். இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 300  பிரதிநிதிகள் பங்கேற்றனர்.