தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தும் நிதி வஞ்சகம் ரூ.45,182 கோடி அநீதி அம்பலம்!
அக்டோபர் 17 அன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தணிக்கைத் தலைவரின் (CAG) 2023-24 நிதி அறிக்கை, தமிழ்நாட்டின் நிதியில் மறைக்கப்பட்ட ஒரு பெரிய வஞ்ச கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அறிக்கையின் முதன்மைக் குற்றச்சாட்டான ரூ. 14,808 கோடி திட்டங்களுக்காகச் செலவிடப்படாமல் ஒன்றிய அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்ற விபரம், நிர்வாகத் தொய்வைக் காட்டுவதாகத் தோன்றினாலும், ஒன்றிய அரசின் திட்டமிட்ட நிதிப் புறக்கணிப்பே (ரூ. 45,182 கோடி இழப்பு) இந்தத் தொய்வுக்கு அடிப்படையான காரணம் என்று சட்டமன்றக் கூட்டத்தொடர் சுட்டிக் காட்டியுள்ளது. ‘மறைக்கப்பட்ட’ காரணம் சிஏஜி (CAG) அறிக்கையின்படி, சுமார் 1,540 திட்டங்களுக்காக ஒதுக்கப் பட்ட ரூ. 14,808 கோடியைச் செல விடாமல் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் திருப்பிக் கொடுத்துள்ளது. முதல் பார்வையில் இது மாநில அரசின் தவறாகத் தோன்றலாம். ஆனால், சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் படி, இவ்வளவு பெரிய தொகை திருப்பி அனுப்பப்படக் காரணம், ஒன்றிய அரசு மாநிலத்தின் நியாய மான நிதிப் பங்கைக் குறைத்ததால் ஏற்பட்ட நிதி வறட்சியும், மாநிலம் அறிவித்த நலத்திட்டங்களுக்குப் போதிய ஒதுக்கீட்டை நிரப்ப முடியாமல் போனதுமே ஆகும். பெரும் இழப்பு : ஒன்றிய அரசிட மிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் மொத்த நிதி, மாநில உற்பத்தியில் 2016-17 இல் 3.41% ஆக இருந்தது, 2024-25 இல் 1.96% ஆக வீழ்ந்துள் ளது. இந்த வீழ்ச்சியால் தமிழ்நாட்டி ற்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ. 45,182 கோடி! இந்த ரூ. 45,182 கோடி நிதி இழப்பின் நேரடி விளைவாகவே, மாநிலம் தனது பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டிய திட்டங் களுக்கான நிதியைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. உதாரண மாக, தமிழ்நாடு உலகப் புத்தாக்கம் மற்றும் திறன் பயிற்சி மையத்திற் கான ரூ.20 கோடியில் ஒரு ரூபாய் கூட செலவிட முடியாமல் போனது இந்த நிதி வறட்சியின் கொடூர விளைவேயாகும். நியாயமாக வர வேண்டிய ரூ.45,182 கோடி நிதி மறுக்கப்பட்ட ஒரு மாநிலத்தில், மாநிலத்தின் பங்களிப்புடன் (Matching Funds) செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கான நிதியை (ரூ. 14,808 கோடி) ஒதுக்க முடியாமல், அவற்றை ஒன்றிய அரசிடமே திருப்பி அனுப்புவது நிர்வாகத் தொய்வு அல்ல, நிதி வறட்சியின் கட்டாயம் என்று மாநில அரசின் தரப்பு வாதிடுகிறது. ஒன்றிய அரசின் வஞ்சகமும் அதன் விளைவும் தமிழ்நாடு இன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9% பங்களிக்கும் மாநிலம் ஆகும். ஆனால், ஒன்றிய வரிப் பங்கில் வெறும் 4% மட்டுமே பெறு கிறது. மேலும், ஒன்றிய அரசு செஸ் மற்றும் கூடுதல் வரிகளை கட்டுப் பாடின்றி விதித்து, மாநிலங் களுக்குப் பகிர வேண்டிய நியாய மான பங்கைத் திட்டமிட்டு குறைக் கிறது. இது கூட்டாட்சிக் கொள்கை களுக்கு இழைக்கும் துரோகம். இந்த நிதி நெருக்கடியின் காரணமாக, l பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற கல்வித் திட்டங்கள் உட்பட பல மக்கள் நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் உள்ளன. l மாநிலத்தின் மொத்தக் கடன்- உற்பத்தி விகிதம் 28% ஆக உயர்ந்து, நிதிப் பற்றாக்குறை (ரூ.90,430 கோடி) அதிகரித்துள் ளது. இதற்கு முதன்மைக் காரணம், பாஜக ஆளும் மாநி லங்களுக்கு வாரி வழங்கப்படும் நிதிக்கு நேர்மாறாக, தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதே ஆகும். இந்த நிதி நெருக்கடியை தமிழ்நாடு அரசு திட்டமிட்டு சமா ளிக்கும் அதே வேளையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் டிசம்பர் 15 முதல் விடு பட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப் படுவது உட்பட பல்வேறு திட்டங் களின் செயலாக்கம் நம்பிக்கை யூட்டுகிறது எனலாம்.