tamilnadu

img

மானிய தொகை உடனே வழங்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

மானிய தொகை உடனே வழங்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

புதுச்சேரி, செப்.27 -  வீடு கட்டுவதற்கு டோக்கன் வழங்கிய பட்டியலின மக்களுக்கு மானிய தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாகூர் கமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பாகூர் கமிட்டியின் 5வது மாநாடு, தலைவர் சதாசிவம் தலைமை யில் நடைபெற்றது. மாநில தலைவர் கொளஞ்சியப்பன் துவக்கி வைத்து பேசினார்.  வேலை அறிக்கையை செயலாளர் கந்தன் சமர்ப்பித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் சரவணன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் கலியன், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் செயலாளர் இளவரசி நிர்வாகிகள் உமா, குப்புசாமி, மேகராஜ் மற்றும் ராமு, தனுசு, தவமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  நிர்வாகிகள் தேர்வு தலைவராக கந்தன், செயலாளராக பக்தவசலம், பொருளாளராக வேலாயுதம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடு கட்ட மானியம் தொகைக்காக டோக்கன் வழங்கியவர்க ளுக்கு மானிய தொகையை உடனே வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மக்களுக்கு தாய் வழி சான்றிதழ் புதுச்சேரி அரசு தொடர்ந்து வழங்க வேண்டும். பாகூரில் வசிக்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இலவசம் மன பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இஸ்ரேல் இனவெறி அரசு காசா மீது நடத்தும் இரக்கமற்ற தாக்குதலை நிறுத்திட வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசு இஸ்ரேல் ஆதரவு நிலையை கைவிட வலியுறுத்தியும், சிபிஎம் சார்பில் சேத்துப்பட்டில் வட்டார செயலாளர் வி.எல்லப்பன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ஆர்.பாரி, எஸ்.ராமதாஸ், என்.சேகரன், எ.லட்சுமணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன் அப்துல் காதர் பி.சுந்தர், ச.குமரன், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.