2002ஆம் ஆண்டு பட்டியலுடன் முன்கூட்டி சரிபார்க்கும் திட்டம் தோல்வி; நாடு முழுவதும் வாக்காளர்களையே பொறுப்பாக்கிய தேர்தல் ஆணையம் 35 கோடிப் பேரின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்
சென்னை, நவ. 16 - இந்தியாவில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) தேர்தல் ஆணையத்திற்கும் பல மாநில அரசுகளுக்கும் இடையே முன் னெப்போதுமில்லாத அரசியல் சட்ட மோதலைத் தோற்றுவித்துள்ளது. இந்த நெருக்கடியின் மைய அம்சமாக, 23 ஆண்டுகள் பழமையான (2002-2005) வாக்காளர் பட்டியலுடன் தற் போதைய வாக்காளர்களைப் பொருத்தி பார்க்க தேர்தல் ஆணையம் மேற் கொள்ளும் “முன்-வரைபடமாக்கல்” (pre-mapping) முயற்சி உள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக வரும் நவம்பர் 26 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணை, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 51 கோடி வாக்காளர்களின் வாக்க ளிக்கும் உரிமையைத் தீர்மானிக்க உள் ளது என்றால் மிகையல்ல. 2026 சட்ட மன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, 35 கோடிக்கும் அதிகமான குடி மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயத்தை எதிர்கொள் வதால், எதிர்க்கட்சிகள் இதனை “பின் வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) கொண்டு வரும் முயற்சி” என்று எச்சரிக்கின்றன.
‘பொருந்தாத’ 35 கோடி வாக்காளர்கள்
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப் படி, எஸ்ஐஆர் பணியின் நோக்கம், வாக்காளர் பட்டியலின் “தூய்மை யை” உறுதிசெய்வதாகும். இருப்பினும் 2002-2005ஆம் ஆண்டு பட்டியல்களு டன் ஒப்பிடும்போது, பல கோடி வாக்கா ளர்கள் ‘பொருந்தாதவர்கள்’ (unma tched) பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம்: தற்போதைய 7.66 கோடி வாக்காளர்களில் வெறும் 32% மட்டுமே 2002 பட்டியலுடன் பொருந்தியுள்ளனர். இதனால், 5.2 கோடி வாக்காளர்கள் (68%) தங்கள் வாக்காளர் பதிவு அதிகாரியின் (ERO) விசாரணையில் ஆவண ஆதாரத்துடன் தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தமிழ்நாடு: இங்கும் 6.41 கோடி வாக்காளர்கள் இதே போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். பழைய ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் மங்கலாகவும், கிழிந்த பக்கங்களு டனும், வாக்காளர் அடையாள (EPIC) எண்கள் இல்லாமலும் இருப்பதால், சரிபார்ப்பு மேலும் சிக்கலாகிறது. மேற்கு வங்கத்தின் விகிதத்தை பயன்படுத்தினால், நாடு முழு வதும் சுமார் 35 கோடி குடிமக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் சவாலை எதிர்கொள் கின்றனர். இந்த தோல்விக்கு முக்கியக் கார ணம், தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் தரவு குறைபாடுகள் ஆகும். பெயர் எழுத்துப்பிழை (உதாரணமாக, சுஷீல் ‘சுசில்’ என்று இருப்பது), 2007 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காரணமாக மாறிய வாக்குச்சாவடி இருப்பிடங்கள், மற்றும் திருமணத் திற்குப் பின் பெயர் மாற்றிய பெண்கள் - என பல வடிவங்களில் பொருந்தாத நிலை அதிகரிக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளது. ஆளும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு களில், ‘எஸ்ஐஆர்’ செயல்முறை யானது இந்திய அரசியல்சட்டத்தின் பிரிவுகள் 14, 19, 21, 325 மற்றும் 326 ஆகியவற்றை மீறுவதாகவும், இது “உண்மையில் என்ஆர்சியை உரு வாக்குவதாகவும் வாதிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் மூலம் குடிமக்களின் தகுதியை நிர்ண யிப்பது உள்துறை அமைச்சகத்தின் வேலை, தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல என திமுக வாதிடுகிறது.
கேரளாவில் கடும் சிரமம்
கேரள மாநிலத்தில் எஸ்ஐஆர் செய லாக்கத்திற்கான நிலை மிக சிரமமா னதாக உள்ளது. அங்கு மாநில உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் எஸ்ஐஆர் திருத்தப் பணிகள் ஒரே நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் 9 மற்றும் 11 தேதிகளில் நடைபெற உள்ளன, அதேசமயம் எஸ்ஐஆர் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை டிசம்பர் 9 ஆம் தேதிதான் வெளியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு 1.75 லட்சம் அரசுப் பணியாளர்கள் தேவை, அதே வேளையில் எஸ்ஐஆர் பணிக்கு 25,668 வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள் (BLOs) தேவைப்படு கின்றனர். மாநில மற்றும் மத்திய தேர்தல் ஆணையம் இரண்டும் ஒரே மாவட்ட ஆட்சியர்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளாகப் பயன்படுத்து கின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வரைவுப் பட்டியல் 2.84 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ளது, அதேசமயம் எஸ்ஐஆர் செயல்முறை 2.78 கோடி வாக்காளர்களின் பட்டிய லை அடிப்படையாகக் கொண்டது. இந்த மோதல் நிர்வாக முடக்கத்தை ஏற்படுத்தும் என்று முதல்வர் பின ராயி விஜயன் வாதிட்டார். கேரள உயர் நீதிமன்றம் ஒத்திவைக்க மறுத்த நிலை யில், இடதுஜனநாயக முன்னணி உட்பட அரசியல் கட்சிகள் உச்சநீதி மன்றத்தை நாட முடிவு செய்துள் ளன. எஸ்ஐஆர் படிவ விநியோக விகிதம் நவம்பர் 14 நிலவரப்படி கேரளா வில் 75.39% மட்டுமே உள்ளது. பணிச் சுமையால் ஏற்பட்ட அழுத்தத்தால், கண்ணூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி ஊழியர் (BLO) தூக்கிட்டு இறந்த சோகம், இந்தச் சிக்கலின் மனித விலை யை வெளிச்சம் போட்டுக் காட்டி யுள்ளது.
பாஜக தவிர அனைவரும் எதிர்ப்பு
கேரளாவின் எஸ்ஐஆர்-க்கு எதிரான ஒருமித்த குரல் குறிப்பிடத் தக்கது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் எதிர்க்கட்சி யான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) - ஆகிய இரு தரப்பும் எஸ்ஐ ஆரை “சரியற்ற மற்றும் தீய நோக்கத்து டன் கூடிய” முயற்சி என்று கூறி சட்ட மன்றத்தில் தீர்மானத்தை நிறை வேற்றின. இதுதொடர்பாக, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், எஸ்ஐஆர் “ஒரு குறிப்பிட்ட பிரிவினரை நீக்குவதற்கான முயற்சி” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 50 லட்சத் திற்கும் அதிகமான வாக்காளர்கள் கேர ளாவில் நீக்கப்படலாம் என்றும், இது “சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களைப்” பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பீகார் அனுபவம்
பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டதும், அதனைத் தொடர்ந்து அங்கு பாஜக தலைமையிலான என்டிஏ வெற்றி பெற்றதும், எதிர்க்கட்சிகள் மத்தியில் எஸ்ஐஆர் ஒரு “தேர்தல் அச்சுறுத்தல்” என்ற உண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. முறையான ஆவணங்கள் இல் லாத வீடற்றோர், பழங்குடியினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்தோர் அதிக அளவில் நீக்கப் படும் அபாயத்தில் உள்ளனர். நாடு முழுவதும் இடம் பெயர்ந்த தொழிலா ளர்கள் (15 கோடிக்கும் அதிகமா னோர்) மூன்று முறை வீட்டிற்கு வந்து சரிபார்க்கும் நெறிமுறை பொருந்தாத தால், அதிக நீக்கங்களை எதிர்கொள் ளும் அபாயம் உள்ளது. பீகார், அதற்கு சிறந்த உதாரணம் என்கின்றனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு: ஜனநாயகத்தின் எதிர்காலம்
நவம்பர் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்ற த்தில் நடைபெறவுள்ள விசாரணை, தேர்தல் ஆணையத்தின் அரசியல்சட்ட அதிகாரம் மற்றும் குடிமக்களின் அடிப்படை வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றுக்கு இடையேயான மோதலைத் தீர்க்க வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றம் எஸ்ஐஆர் செயல்முறையை ரத்து செய்யலாம், காலக்கெடுவை நீட்டிக்கலாம் அல்லது ஆவணத் தேவைகளைக் குறைக்க லாம். எவ்வாறாயினும், 51 கோடி வாக் காளர்களின் எதிர்காலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அடுத்த டுத்து வரவிருக்கும் இந்தியாவின் மாநிலத் தேர்தல்களை வடிவமைக்கும் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
