tamilnadu

தஞ்சாவூர் மற்றும் அறந்தாங்கி முக்கிய செய்திகள்

முகக்கவசம் அணியாதவர் களுக்கு அபராதம்  

தஞ்சாவூர், ஜூன் 12- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி, பலரும் முகக்கவசம் அணி யாமல் நடமாடி வருகின்ற னர். இதில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் மு.மணிமொழியன் மேற் பார்வையில், துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வா ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து முகக்கவசம் அணி யாமல் நடமாடிய 23 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.2,300 அபராதம் விதித்தனர். 

வாகன  விபத்தில் இளைஞர் பலி  

அறந்தாங்கி, ஜூன் 12- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஜேஜே நகரை சேர்ந்த காஜாஅலாவு தீன். இவரது மகன் முபாரக் (17). இவர் கேட்டரிங் முடித்து சென்னையில் பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா  ஊரடங்கால் சொந்த ஊர் வந்திருக்கிறார். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட தால் அறந்தாங்கி பெரிய கடைவீதியில் ஒரு ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்தி ருக்கிறார்.  இந்நிலையில் வியாழன் அன்று மதிய உணவிற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புதுவாக் கோட்டை சாலையில் சென்ற போது முன்னால் சென்ற வாக னத்தை முந்தி செல்லும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டர் மீது மோதி பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

கொரோனா தொற்று அவதூறு பரப்பியவர் கைது

பொன்னமராவதி,  ஜூன் 12- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி வைரவன்பட்டி வசித்து வரும் முன்னாள் ஊராட்சி தலைவரும் தற்போது உள்ள ஊராட்சி தலைவரின் கணவருமான பெரியபொண்ணன். இவ ருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கோவிந்தன் வயது 35, சமூக வலைதளத்தில் முன்னாள் ஊராட்சி தலை வரின் பெயரை பயன்படுத்தி அவதூறாக பரப்பியுள்ளார். இந்நிலையில் பெரிய பொண்ணன் உலகம்பட்டி காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறை யினர் கோவிந்தனை கைது செய்தனர்.