tamilnadu

img

நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு

நல்லாசிரியர் விருது  பெற்றவருக்கு பாராட்டு

தஞ்சாவூர், அக். 13-   தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின், பட்டுக்கோட்டை  வட்டக்கிளை சார்பில் 114 ஆவது மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.            கூட்டத்திற்கு வட்டத் தலைவர் த. சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கண.கல்யாணம் வரவேற்றார். க.கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் செயலாளர் சிவ.ரவிச்சந்திரன் வேலை அறிக்கை, பொருளாளர் சோம. ஆறுமுகம் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும், கவிஞர் சுமித்ரா சத்தியமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வட்ட துணைத் தலைவர் அ.சண்முகம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மேனாள் தலைமையாசிரியர் இந்திரா சாந்தி  பாராட்டுரை வழங்கினார். கவிஞர் சுமித்ரா சத்தியமூர்த்தி ஏற்புரை வழங்கினார். வட்டத் தணிக்கையாளர் இளஞ்சேரன் நன்றி கூறினார்.