தமிழக புதிய டிஜிபி விரைவில் அறிவிப்பு
சென்னை, செப். 27 - தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனுக்கு கூடுதலாக சட்டம் - ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய டிஜிபி -யை தேர்வு செய்வதற்கான ஆலோச னைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில், ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலர் நா. முரு கானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முதல் 3 இடங்களில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.