தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம்
தருமபுரி, ஜூலை 16- தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடை பெற்று வருகிறது. உழைக்கும் மக்களின் குரலாக ஒலிக்கும் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதி யாக, தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக ளில் புதனன்று சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச் சுனன், ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ். சின்னராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.கிரைஸாமேரி கே.எல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 20 ஆண்டு சந்தாக்கள் பெறப்பட்டன. ஈரோடு இதேபோன்று, ஈரோடு தாலுகா, மூலப்பாளையம், நசியனூர் பகுதிக ளில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா, தாலுகா செயலாளர் என். பாலசுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற் றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக் குட்பட்ட பகுதிகளில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லி பாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ். பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கோ.செல்வராசு, பி.ராணி, நகரச் செயலாளர் சி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மொத்தம் 27 சந் தாக்கள் சேகரிக்கப்பட்டன.