tamilnadu

img

மகளிர் தினத்தை சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள்

மகளிர் தினத்தை சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் வித்தியாசமாக கொண்டாடினார்கள். நேரில் பார்க்கும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் 15 தெருக்களில் தூய்மை பணியை மேற்கொண்டு வரும் 30 பெண் துப்புரவு பணியாளர்களுக்கு  மாலை அணிவித்து, புடவைகளையும் வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்ததுடன். கல்லூரிக்கும் அழைத்து சென்று கவுரப்படுத்தினர். மாணவர்களின் இந்த நிகழ்வை கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும் வெகுவாக பாராட்டினர்.