tamilnadu

img

திருக்கடையூர் பள்ளியில் 79 நிமிடங்களில் 79 ஆயிரம் தேசிய கொடிகள் வரைந்து மாணவர்கள் சாதனை

திருக்கடையூர் பள்ளியில்  79 நிமிடங்களில் 79 ஆயிரம் தேசிய கொடிகள்  வரைந்து மாணவர்கள் சாதனை

மயிலாடுதுறை, ஆக. 17-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, திருக்கடையூர் ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் மிஷின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளக 79 ஆயிரம் தேசியக் கொடிகள் வரைந்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில், பள்ளிக்குழு உறுப்பினர் சிவஸ்ரீ அமிர்தகடேச சிவாச்சாரியர் தேசிய கொடியை ஏற்றி வைத்துப் பேசினார்.  தொடர்ந்து, இப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 79 மாணவ- மாணவிகள், 79 நிமிடங்களில் 79 ஆயிரம் தேசிய கொடிகள் வரைந்த உலக சாதனையை ஜாக்கி புக் ஆஃப் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் பள்ளி சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் எஸ். ஸ்ரீராம், பள்ளிக் குழு உறுப்பினர்கள், முதல்வர் சீனிவாசன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.