tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மாணவர் சேர்க்கை  சிறப்பு முகாம் புதுக்கோட்டை, '

ஜூலை 5 - புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவர் சேர்க்கை சிறப்பு முகா மினை மாவட்ட ஆட்சியர்  மு.அருணா சனிக்கிழமை துவக்கி வைத்து, மாணாக்கர்களுக்கு சேர்க்கைக்கான ஆணை யினை வழங்கினார்.  முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) ம.சுந்தர கணபதி, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலு வலர் ஜெயந்தி, உதவி திட்ட அலுவலர் செந்தில்,  அறந்தாங்கி பாலி டெக்னிக் கல்லூரி முதல் வர் குமார், ஏம்பல் ஐடிஐ முதல்வர் நவ நீதன், மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் (நான் முதல்வன் திட்டம்) சரவ ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜூலை 9-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் பெரம்பலூர்,  ஜூலை 5 - பெரம்பலூர் மாவட் டம், ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தில், 9.7.2025 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சி யர் ச.அருண்ராஜ் தலை மையில் மக்கள் தொடர்புத்  திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  எனவே ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிரா மம் மற்றும் அதனைச்  சுற்றியுள்ள கிராமங்களைச்  சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொட்டரை கிராம நிர்வாக அலுவலகத்தில், வருவாய்த் துறை அலு வலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட  நிர்வாகத்தின் சார்பில்  கேட்டுக் கொள்ளப்படு கிறது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு அரியலூர்,  ஜூலை 5 - அரியலூரிலுள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலுள்ள கூட்ட ரங்கில், காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டு நர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறை கள் குறித்து சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி  தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் சீருடை அணிந்து ஆட்டோவை இயக்க வேண்டும். நிர்ண யிக்கப்பட்ட அளவைத் தவிர மக்களை ஏற்றக் கூடாது. சாலை பாது காப்பு விதிகளை மதிக்க  வேண்டும். அதிவேக மாக ஓட்டக் கூடாது. மது  அருந்தி விட்டு ஆட்டோக் களை இயக்கக் கூடாது  என்பன உள்ளிட்ட அறி வுரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகர  காவல் நிலைய ஆய்வா ளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். அரியலூர் நகர போக்கு வரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராமலிங்கம், உலக நாதன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் 

பெரம்பலூர், ஜூலை 5-  பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், கன்று கள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்தல், ஆடு களுக்கு ஆண்மை நீக்கம் செய்தல், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி  போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பசு மாடு களுக்கு இலவசமாக சினை ஊசி, சினை பரிசோதனை, சினை  பிடிக்காத மாடுகளுக்கு ஸ்கேன் கருவிகள் மூலம் சிறப்பு பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, கால்நடை வளர்ப்பு குறித்த கருத்தரங்கு, கிடாரிக் கன்றுகளுக்கான பேரணி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த கருத்துக் கண்காட்சி நடைபெற்றது.  முகாமில் கலந்து கொண்ட கால்நடை வளர்ப்பாளர் களுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு முறை குறித்து  ஒலி, ஒளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த  முகாமில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள், கால்நடை  வளர்ப்போர் தங்களது கால்நடைகளுடன் கலந்து கொண்ட  னர்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஜூலை 5 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழகொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இ-நாம் பருத்தி மறைமுக ஏலத்தில் சென்னை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் ஆபிரகாம் ஆய்வு மேற் கொண்டார். அவரது முன்னிலையில் நடந்த ஏலத்தில், கும்பகோணம் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 908 விவசாயிகள் சுமார் 221  மெட்ரிக் டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர். மகாராஷ்ட்ரா,  ஆந்திரா, கும்பகோணம், செம்பனார்கோயில், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்று  குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.7,463, குறைந்தபட்சம் ரூ.5899, சராசரி ரூ.6,823 என விலை நிர்ணயித்தனர். 241 தாட்டுகள் ரூ.7,001 முதல் ரூ.7,500 வரையும், 660  தாட்டுகள் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரையும் விற்பனையா னது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரம், ஆவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1356 விவசாயிகள்  பருத்தியை  விற்பனைக்கு எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்பகோணம், செம்பனார்கோயில், பண்ருட்டி, விழுப்புரம், கொங்கணாபுரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 வணிகர்கள் கலந்துக் கொண்டனர். பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனனக் குழு  செயலாளர் சரசு தலைமை வகித்தார்.