tamilnadu

img

வளவனூரில் தெரு நாய்கள் மிரட்டல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்

வளவனூரில் தெரு நாய்கள் மிரட்டல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம், அக். 3- விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் சாலையோரம் தெரு நாய்கள் மிரட்டலால் விபத்து ஏற்படும் என வாகன ஓட்டிகளும் பொது மக்களும் மிரண்டு வரு கின்றனர். விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் வளவனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு தனியார் பள்ளி எதிரில் சாலை ஓரம் அங்கு தொடர்ந்து குப்பை மற்றும் கழிவுகள் கொட்டி வரு கின்றனர், அதிகபடி சேர்ந்து குவியலாக உள்ள அந்த குப்பையை அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கிளறி விளையாடி வரு கின்றன. மேலும் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அந்த இடத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை வாகனத்தோடே விரட்டி கொண்டு ஓடிவந்து கடிக்க வருவதால் வாகனத்தை வேகமாக செலுத்துவதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரு கின்றனர். அதனால் உடனடியாக வளவனூர் பேரூராட்சி நிர்வாகம் அங்கு தொடர்ந்து குவிந்து கிடக்கும் குப்பை களை அகற்றிட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என வாகன ஓட்டுகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து பேரூ ராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்குமா என பொருத்திருந்து பார்க்கப் படுகிறது.