tamilnadu

அம்மாபட்டினத்தில் அடுத்தடுத்து 4 பேரை கடித்த தெரு நாய்

அம்மாபட்டினத்தில் அடுத்தடுத்து 4 பேரை கடித்த தெரு நாய் 

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க கோரிக்கை

ஜூலை 14-  அம்மாபட்டினத்தில், அடுத்தடுத்து நான்கு பேரை வெறிநாய் கடித்ததால், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வடக்கு தெருவை சேர்ந்த புகாரி (29) என்பவர், ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் கடை தெருவுக்கு நடந்து வந்துள்ளார்.  அப்போது அங்கு தெருநாய் கடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மேலும் 2 பேரை தெருநாய் கடித்துள்ளது. மூன்று பேரும் அருகில் உள்ள மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் சிகிச்சைக்கு வந்தனர்.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அம்மாபட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த முகமது ஜலீல் (22) என்பவரையும் தெருவில் உள்ள வெறிநாய் கடித்துள்ளது.  அடுத்தடுத்து நான்கு பேரை வெறிநாய் கடித்துள்ளதால் அம்மாபட்டினத்தில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வெறி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்