ஏவிசி கல்லூரியில் ஆங்கிலத்தில் கதை சொல்லுதல் போட்டி
மயிலாடுதுறை, ஆக. 23- மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில், இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதிய மாணவர்களின் வரவேற்பு நாள் மற்றும் ஆங்கிலத்தில் கதை சொல்லுதல் போட்டி நடைபெற்றது. ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் தலைமைவகித்தார். இணை பேராசிரியர் டாக்டர் எம். வெங்கடேசன் முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினார். இதில், இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் நீதிக் கதைகள், தங்களின் பாடப் புத்தகங்களில் உள்ள ஆங்கில நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு கதைகளை எளிய ஆங்கிலத்தில் அதற்கேற்ற முக பாவனைகளுடன், குரல் ஏற்றத்தாழ்வுகளுடன் கதை கூறியது பார்வையாளர்களை கவர்ந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.