tamilnadu

img

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி  அனைத்து பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக். 6-  நியாய விலை கடைகளில் எடையாளர் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் கணினி பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பு தாளாளர்கள் பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும். நியாய விலை கடைகளில் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அக். 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.