tamilnadu

img

தருமபுரியில் அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாடு!

தருமபுரியில் அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாடு!

அ.சவுந்தரராசன், ஜி.சுகுமாறன் உள்ளிட்ட தலைவர்கள்  பங்கேற்பு

தருமபுரி, ஆக.5 - அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் (சிஐடியு) 16 ஆவது மாநில மாநாடு, தருமபுரியில் தோழர்கள் என்.குட்டப்பன், எஸ்.  பக்தவச்சலு நினைவரங்கத்தில் (டிஎன்சி விஜய்  மஹால்) செவ்வாயன்று எழுச்சியுடன் துவங்கி யது. மாநாட்டின் துவக்கமாக, போக்குவரத்துத் தொழிலாளர்களின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே, மாநாட்டுக் கொடியை புலவர் கஜேந்திரன் ஏற்றி வைத்தார்.  நினைவு ஜோதிகள் முன்னதாக, சங்கத்தின் நிர்வாகிகள் என். முருகையா, டி.ஜான் கென்னடி, பி. செல்லத் துரை, எம். வேளாங்கண்ணி ராஜ், எம். கனகராஜ்  ஆகியோர் எடுத்து வந்த மாநாட்டு கொடியை  நிர்வாகி வெங்கடாச்சலம் பெற்றுக் கொண்டார்.  நிர்வாகிகள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.செம்பன்,  எம்.சேகர், என்.முருகேசன் ஆகியோர் எடுத்து வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவு ஜோதியை,  சம்மேளன உதவித் தலைவர் வீ.பிச்சை பெற்றுக் கொண்டார்.  நிர்வாகிகள் வி.மனோன்மணி, கே.வெங்க டாசலபதி ஆகியோர் எடுத்து வந்த தோழர் கே.எம். ஹரிபட் நினைவு ஜோதியை, சம்மேளன உதவித் தலைவர் ஏ.பி. அன்பழகன் பெற்றுக் கொண்டார். நிர்வாகிகள் கே.பிரபாகரன், சி.கோவிந்தன் ஆகியோர் எடுத்து வந்த ஓசூர் சக்திவேல் நினைவு ஜோதியை, சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் ஏ.கனகசுந்தர் பெற்றுக்கொண்டார். பிரதிநிதிகள் மாநாடு இதையடுத்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு, சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் எம். கனகராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் எம். சுருளிநாதன் வரவேற்றார். சிஐடியு  மாநிலப் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் மாநாட்டைத் துவக்கி வைத்து பேசினார். சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கைகளையும், பொருளாளர் வி. சசிகுமார்  வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். நெல்லிக்கனி வழங்கல் முன்னதாக, தருமபுரி மண்ணைச் சேர்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதிய மான், புலவர் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்கி யதன் நினைவாக, மாநாட்டு அரங்கத்திற்கு வந்த பிரதிநிதிகளுக்கு, வரவேற்புக் குழு சார்பில் நெல்லிக்கனி வழங்கப்பட்டது. மாநாட்டுத் திடலில் தருமபுரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள், புராதனச் சின்னம், சுற்றுலாத் தலங்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்காட்சி திறக்கப்பட்டிருந்தது. இதனை பிரதிநிதிகள் கண்டு ரசித்தனர். மாநாட்டு வளாகத்தில் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.