உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
பாபநாசம், செப்.3 - பண்டாரவாடை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகு நாதபுரத்தில் நடந்த முகா மில் மாவட்ட ஆதி திரா விடர் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பாபநாசம் தாசில்தார் பழனிவேல், பிடிஓ விஜய லட்சுமி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர்கள் அய்யாராசு, தாமரைச் செல்வன், பாபநாசம் எம்.எல்.ஏ-வின் உதவியாளர் முகமது ரிபாயி, தி.மு.க பாபநாசம் பேரூர் செய லர் கபிலன் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர். இதில் பொது மக்களி டமிருந்து பெறப்பட்ட மனுக்கள் நடவடிக்கைக் காக, உரிய துறைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.
பேராவூரணி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி யில், 1 முதல் 9 ஆவது வார்டு வரையிலான பொதுமக்கள் பயன்பெ றும் வகையில் உங்களு டன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடை பெற்றது. முகாமுக்கு, பேரூ ராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களி டம் கோரிக்கை மனுக் களைப் பெற்றார். முகா மில், மகளிர் உரிமைத் தொகைக்கு 385 விண் ணப்பங்களும், குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகள் அடங்கிய 407 மனுக்கள் என மொத்தம் 792 மனுக்களை பொது மக்கள் அரசு அலுவலர் களிடம் வழங்கினர். மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் ஏற் பாட்டில், ஒப்பந்த துப்பு ரவு பணியாளர்கள் 44 பேரை நலவாரியத்தில் இணைக்க விண்ணப்பிக் கப்பட்டது
பருத்தி மறைமுக ஏலம் பாபநாசம்
, செப்.3 -தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும், பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டை யூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற் பனைக் கூட கண்கா ணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், கும்பகோணம், இதன் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த 437 விவ சாயிகள், 71 மெட்ரிக் டன் அளவு பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் பருத்தி மறை முக ஏலத்தில் கலந்து கொண்டு, பருத்திக்கு அதிகபட்சம் ரூ.7,790, குறைந்தபட்சம் ரூ.6,789, சராசரி ரூ.7,307 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் தோராய மதிப்பு ரூ.52.14 லட்சம்.