tamilnadu

img

உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

கரூர், ஜூலை 31-  கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி, கரூர் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் சமுதாயக் கூடம், கரூர் மாநகராட்சி, பசுபதிபாளையம், தனியார் திருமண மண்டபம் மற்றும் பஞ்சமாதேவி நவஜீவன் பள்ளி ஆகிய பகுதிகளில் வியாழனன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில், மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தலைமையில், 45 பயனாளிகளுக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இம்முகாமில் மாநகராட்சி மேயர் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. கண்ணன், மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, துணை மேயர் ப. சரவணன், வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டாட்சியர்கள் மோகன்ராஜ், குமரேசன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.