செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் வெள்ளி விழா தேர்பவனி
மயிலாடுதுறை, ஜூலை 25- மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயம் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா தேர் பவனி கொடியேற்றம் நடை பெற்றது. பொறையார் இராஜம்மாள் வீதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயம் 25 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பழங்கள், இனிப்பு, புடவைகள் என பல வகையான பொருட்களை சீர்வரிசை களாக எடுத்து பேரணியாக வந்தனர். இதில் நாகை, கடலூர், சென்னை, மதுரை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங் களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆக.19 இல் காத்திருப்பு போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 25- சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட முசிறி நகராட்சி பேரவைக் கூட்டம், துணைத் தலைவர் சிவலிங்கம் தலைமை யில் நடைப்பெற்றது. சிவா வரவேற்றார். பேரவையை டி.பி.நல்லுச்சாமி துவக்கி வைத்துப் பேசினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் அசோக், லால்குடி நகராட்சி செயலாளர் மகாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரவையில், ஆகஸ்ட் 19 ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்துவது, போனஸ் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக கார்த்தி, செயலாளராக முத்து, பொருளாளராக சிவா, துணைத் தலைவர்களாக சிவலிங்கம், மணிகண்டன், சுமதி, சதீஷ்குமார், துணைச் செயலா ளர்களாக சந்திரசேகரன், மணிவேல், குமரவேல், பரிமளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார். முத்து நன்றி கூறினார்.