நீருக்கடியில் நீந்தும் நீச்சல் போட்டி மாநில அளவில் வெற்றி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை, ஆக.30- புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி நீருக்கடியில் நீந்தும் நீச்சல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான நீருக்கடி யில் நீந்தும் நீச்சல் போட்டியில், பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ம.நிஷாந்த் கிருஷ்ணன், 400 மீட்டர் நீச்சல் ரிலே போட்டியில் ஆண்கள் ஜுனியர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். ஆறாம் வகுப்பு மாணவி ம. சந்தோஷிகா 400 மீட்டர் நீச்சல் ரிலே போட்டி யில் பெண்கள் ஜுனியர் பிரிவில் இரண்டாம் இடம் மற்றும் அபென்னா 50 மீட்டர் நீச்சல் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார். நீருக்கடியில் நீந்தும் நீச்சல் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களை, பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் ஆகியோர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.