சிபிஎம் அலுவலகம் வருகை தந்த இலங்கை தமிழ்த் தலைவர்கள்!
சென்னை, டிச. 22 - இலங்கையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் திங்கட்கிழமை (டிச.22) அன்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான பி. ராம மூர்த்தி நினைவகம் வருகை தந்தனர். இங்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோருடன், இலங்கை தமிழர்களின் பிரச்சனை குறித்து கலந்துரையாடினர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ், பிரச் சாரச் செயலாளர் நடராஜர் காண்டீ பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
